தன்னை தேடி அலைந்தவர்களை கண்டு பிடித்து உதவிய பிரபல நடிகர்!

நடிகர் ராகவா லாரன்ஸ் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், நடன இயக்குனரும் ஆவார்.

By Fahad | Published: Apr 06 2020 10:16 PM

நடிகர் ராகவா லாரன்ஸ் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், நடன இயக்குனரும் ஆவார். இவர் தமிழில் வெளியாகிய ஜென்டில்மன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயல்பாகவே ஏழை எளியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், இவரை தேடி தன்னுடைய மனநிலை சரி இல்லாத பிள்ளையுடன் ஒரு தாயார் அலைந்து திரிந்து அவரை கண்டுகொள்ள இயலாததால் ரோட்டுப்புறங்களிலேயே தங்கி இருந்துள்ளார். இதை நாளிதழ்கள் மூலம் அறிந்த லாரன்ஸ் அவர்களை வீட்டிற்கு அழைத்து உபசரித்து தேவையான உதவிகளை தான் செய்வதாகவும், முடியாத பட்சத்தில் அரசிடம் உதவி பெற்று தருவதாகவும் கூறியுள்ளார். https://twitter.com/JSKGopi/status/1151128077415546880

Related Posts