டாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும்-அமைச்சர் தங்கமணி

டாஸ்மாக் கடைகளில்  விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்  குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதபடி  5200 டாஸ்மாக் கடைகளிலும், விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளது ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்படும் என்றும்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.