ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு :அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி

இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐயால்  கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். ஆனால்  ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை இந்த வழக்கில்  சி.பி.ஐ கைது செய்தது.இந்த நிலையில் சிபிஐ   ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க சிறப்பு நீதி மன்றத்தில் அனுமதி கோரியது.

இதற்கு பின்னர் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியை விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தினை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்துவதற்காகவே இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.