#Breaking: ப.சிதம்பரத்துக்கு 30-ஆம் தேதி வரை சிபிஐ காவல்

#Breaking: ப.சிதம்பரத்துக்கு 30-ஆம் தேதி வரை சிபிஐ காவல்

சிதம்பரத்தின் காவல் வருகின்ற  30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.கடந்த 22-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தப்பட்டார்.இதனையடுத்து  சிபிஐயின் கோரிக்கையான 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சிதம்பரத்துக்கு 5 நாட்கள் காவலில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில்  இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ள நிலையில்  இன்று அது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மேலும்  அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில்  சிதம்பரத்தை நாளை பகல் 12 மணி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில்  5 நாள் சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை  நீட்டிக்க கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட சிபிஐ நீதிமன்றம்  சிதம்பரத்தின் காவலை வருகின்ற  30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் 30-ஆம் தேதி சிதம்பரத்தை மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

Join our channel google news Youtube