கவுன்சிலரை கடத்திய வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு  தொடரப்பட்டது. 
  • கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சாத்தையா நீதிமன்றத்தில் ஆஜராகி  வாக்குமூலம் அளித்ததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  இரு கட்டங்களாக நடைபெற்றது.தொடர்ந்து வாக்கு எண்னிக்கையும் நடைபெற்றது .இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் பதவியேற்றனர்.இதற்கு இடையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர்  ராஜா .இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், என் தந்தை சாத்தையா .இவர்  சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய எட்டாவது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி காலை 5 மணி அளவில் தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. என்னுடைய தந்தையின் செல்போனுக்கு போன் செய்தபோது அதிமுகவை சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்டோர்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக கூறினர்.

இதையடுத்து தந்தை மீட்டுத்தருமாறு காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் கடந்த ஆறாம் தேதி என் தந்தையை பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை பார்க்க முயன்றபோது அவர்கள் தடுத்து விட்டனர். எனவே எனது தந்தையை மீட்டுத் தருமாறு அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ராஜா , புகழேந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் “சாத்தையா சட்டவிரோதமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு  உத்தரவிட்டனர்.காவல்துறை தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் இது தொடர்பான அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை  இன்று ஒத்திவைத்தார்.

இதனை தொடந்து இன்று நடைபெற்ற வழக்கில்,கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சாத்தையா நீதிமன்றத்தில் ஆஜராகி தான் மகள், மருமகனுடன் இருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இதனால்  வழக்கினை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.மேலும்  கவுன்சிலரின் மகன் ராஜாவுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.