பாஜக அலுவலகத்தில் தாக்கப்பட்ட பியூஷ் மானுஷ்!பிணையில் வர முடியாத அளவு 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கடந்த இரு நாட்களுக்கு முன் பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பாஜகவினருடன்

By Dinasuvadu desk | Published: Aug 31, 2019 12:32 PM

கடந்த இரு நாட்களுக்கு முன் பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பாஜகவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்கப்பட்டார் பியூஷ் மானுஷ். சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பேச முகநூலில் நேரலை போட்டுகொண்டு சென்றார். அப்பொழுது அங்கிருந்த பாஜகவினருடன் பேச அது கடும் விவாதமாக மாறியது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பொழுது தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அழைத்து சென்றனர்.அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் பிணையில் வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc