டாஸ்மாக் தொடர்பாக தொடர்ந்த மனுக்கள் ! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு . அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்று கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட இரண்டு மனுக்களை தள்ளுபடி  செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது .மேலும்  மனுதாரருக்கு ரூ.1,00,000 அபராதமும் விதித்து உத்தரவு  பிறப்பித்துள்ளது .சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே டாஸ்மாக் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்  செய்தது குறிப்பிடத்தக்கது.