தளபதி விஜயின் தந்தை இயக்கிய எசகுபிசகான கேப்மாரி ட்ரெய்லர் இதோ!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரம் தளபதி விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். 

By manikandan | Published: Nov 04, 2019 08:14 AM

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரம் தளபதி விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.  இவர் தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா கண்ட நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற தரமான நல்ல படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன. இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது கடைசி படமான 70 வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். இது ஜெய்க்கு 25வது படமாகும். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த ட்ரைலரில் முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் அடல்ட் காமெடி வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் ட்ரைலரை திட்டியும், ரசித்தும் வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc