20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புற்றுநோய் மையம்.! சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சு.!

  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.20 கோடி மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் தாக்களை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 2வது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் விவாதித்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையத்தை அமைக்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையம் அமைக்கும் அளவிற்கு, அங்கு புற்றுநோய் பாதிப்புகள் இல்லை என குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.20 கோடி மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற நவீன வசதிகளுடன் புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த விஜயபாஸ்கர், அப்பகுதி சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இந்த மையத்தில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்