நாடாளுமன்றத்தை கலைத்தார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

நாடாளுமன்றத்தை கலைத்தார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் கனடாவின் பிரதமராக  உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டு கவர்னர் ஜெனரலான  ஜூலி பயட்டே (Julie Payette) -வை நேரில் சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரை செய்தார். இதற்கு பின்னர் கவர்னர் ஜெனரல் ஜூலி பயட்டே (Julie Payette) நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.