இப்படியும் தக்காளி ரசம் வைக்க முடியுமா? 5 நிமிஷம் போதும்!

வீட்டில் சமையல் செய்வது என்பது பெண்களுக்கு பெரிய பாரமான வேலை கிடையாது. ஆனால் என்ன செய்வது அதை எப்படி சுவையாக செய்வது என்பதை யோசிப்பதற்கு தான் நாட்களும் காலங்களும் சென்றுவிடுகிறது. மிகவும் எளிமையான தக்காளி ரசம் வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்

தேவையான பொருள்கள்

தக்காளி தேவையான அளவு, கொத்தமல்லி, வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம் சிறிது மஞ்சள்தூள் ,தேவையான அளவு உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மூன்று.

செய்முறை

சீரகம், மிளகு சிறிதளவு , வெள்ளைப் பூண்டு, காய்ந்த மிளகாய்2  கருவேப்பிலை ஆகியவற்றை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின்பு அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதுதான் ரசப்பொடி. ஒரு கடாயில் தக்காளியை போட்டு தண்ணீர் ஊற்றி சற்று கொதிக்கவிட வேண்டும். அதன் பின்  நன்றாக தக்காளியின் தோலை உறித்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இறுதியாக ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த தக்காளி மற்றும் ரசப் பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கிளறவும். அதன்பின் அளவுக்கு ஏற்றார்போல் சேர்த்து உப்பு போட்டு கிளறி கொதிக்க விட்டு இறக்கினால் அருமையான தக்காளி ரசம் ரெடி.

author avatar
Rebekal