சுக்கு பயன்படுத்தி இவ்வளவு நோயை குணப்படுத்தலாமா ..?

சுக்கை பயன்படுத்தி நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை தீர்வுகாண முடியும்.சுக்கு

By Fahad | Published: Apr 01 2020 05:36 AM

சுக்கை பயன்படுத்தி நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை தீர்வுகாண முடியும்.சுக்கு என்பது இஞ்சியை நன்றாக உலர வைத்து பின் இருப்பதுதான் சுக்கு. இது நமது பழங்கால உணவுகளில் இருந்து பயன்படுத்தி வருகிறோம். இது எத்தகையதாகஉணவாக இருந்தாலும் அதை செரிக்க வைத்துவிடும் .உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும் , உணவு பாதைகளையும் சுத்தப்படுத்தும். அதிலும் குறிப்பாக சளி பிரச்சனை சரி செய்வதில் சுற்றுக்கு தனி இடமே உள்ளது. நன்மைகள்: சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தீர்ந்து விடும். சுக்கு , கருப்பட்டி , மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் . சுக்கோடு, சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை நீங்கும். சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

More News From dried ginger