என்னால் இனி நடக்க முடியுமா? நடிக்க முடியுமா? பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற  படத்தில்

By leena | Published: Jan 15, 2020 10:21 AM

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற  படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொண்டு நடக்க முடியாத நிலைமையில் இருந்தார். இதனை அவர் தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டார். தற்போது இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "என்னால் இனி நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, முக்கியமாக நடனம் ஆட முடியுமா என்று என் கேள்விகள் இருந்தது. என்னால் முடியாது என்று தான் என் மனதில் பதில் இருந்தது. ஆனால் என் FIR பட இயக்குனர் மனு ஆனந்த் தான் என்னை ஊக்கப்படுத்தினார். அவர் என் மீது நம்பிக்கைகாகவே நான் bedல் இருந்து எழுந்து படிப்படியாக நடக்க ஆரம்பித்தேன். நான் மீண்டும் ஷூட்டிங் போன போது நன்றாக பார்த்துக்கொண்டனர். தற்போது 100 சதவீதம் குணமடைந்துவிட்டேன்" என பதிவிட்டுள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc