துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா ? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

  • முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு விட்டு தர தயாரா என  திமுக

By Fahad | Published: Apr 06 2020 02:17 AM

  • முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு விட்டு தர தயாரா என  திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
  • துரைமுருகன் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே ? மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதிப்பாரா? என்று  அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
திமுகவில் ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? என்று  முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.ஆனால் அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், திமுகவில் அது போல் நடக்காது என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,3 முறை முதலமைச்சராக  இருந்த  பன்னீர் செல்வத்துக்கு, தனது பதவியை விட்டுத்தர தயாரா என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் துரைமுருகன் கருத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.அவரது பதிலில்,  நாங்கள் ஒன்றும் மிட்டா மிராசு கிடையாது. அதிமுகவில் உழைப்புக்கு பலன் எப்போதும் கிடைக்கும்.அடிமட்ட தொண்டன் கூட கொடிகட்டிய காரில் பயணிக்க முடியும்.துரைமுருகன் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே ? மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.