குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா ? ராகுலுக்கு நட்டா கேள்வி

உத்திர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக

By venu | Published: Jan 24, 2020 07:20 PM

  • உத்திர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது.
  • இந்த சட்டம் குறித்து 10 வரிகள்  ராகுல் காந்தி தொடர்ந்து பேச முடியுமா என்று பாஜக தேசியத் தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். 
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே மத்திய அரசு இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றது.
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், யாருடைய குடியுரிமையையும்  குடியுரிமை திருத்த சட்டம் பறிக்காது என்பதை மக்கள் உணர வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கான சட்டம்.குடியுரிமை திருத்த சட்டம் குறித்து  தொடர்ந்து 10 வரிகள் ராகுல் காந்தி பேச முடியுமா ?  அவ்வாறு அவர் பேசி விட்டால் அவர் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சட்டம் குறித்து தெரியாத காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.
&
Step2: Place in ads Display sections

unicc