மது வாங்க 7 நாளுக்கு 7 கலர் டோக்கன் -டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு

மது வாங்க 7 நாளுக்கு 7 கலர் டோக்கன் -டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன் விநியோகம்  செய்ய முடிவு செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு . அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் கொரோனா எளிதாக  பரவும் என்ற அச்சம்  எழுந்தது .இதனிடையே உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்  என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன் விநியோகம்  செய்ய முடிவு செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே மதுபானம் வாங்க மதுக்கடை வர முடியும். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join our channel google news Youtube