ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம்

அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 28-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றார்.அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார். இதன் பின் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத்தொடர்ந்து  நியூயார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ2,780 கோடி முதலீட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க 16 அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .

Related News