பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது !

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கும் வருகின்ற 17ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் 4ம் கட்ட ஊரடங்கும் அமலுக்கு வரும், ஆனால் இது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அமலில் உள்ள 3ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பேருந்து போக்குவரத்தும் அனுமதி வழங்கப்பட உள்ளது. தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் பேருந்தில் பாதி அளவில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவு விதித்துள்ளனர்.  

இவ்வாறு பாதி பயணிகளை மட்டும் பேருந்தில் ஏற்றினால் கடும் நஷ்டம் ஏற்படும் என்பதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார். மேலும், 1.கி.மீீ  1.60 ரூபாய் வசூலித்த நிலையில், தற்போது 1.கி.மீ 3.20 ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெறவித்துள்ளனர். 

author avatar
Vidhusan