ஓடுகின்ற பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டுழியம் -அதிர்ந்த பயணிகள்

  • ஓடும் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்களால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிரண்டனர்.
  • பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை கைது செய்தது காவல்துறை

தலைநகர் சென்னையில் வெளியில் இருந்து பிராட்வே செல்லும் அரசு மாநகரப்பேருந்து ஒன்று  நியூ காலேஜை சேர்ந்த மாணவர்கள் அதில் பயணம் செய்தனர்.பேருந்து இயக்கத்தில் இருந்து கொண்டிருக்க அதில் ஒருவன் பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயற்சித்தப்படியாக  ஜன்னல் கம்பியின் மீது கால் வைத்து நின்றுகொண்டு பயணம் செய்கிறான்.அந்த மாணவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் சேர்ந்து பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.இவ்வாறு பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சகப்பயணிகள் கூறியும் கேட்காமல் தொடர்ந்து மேற்கூரையிலேயே பயணித்தில் ஈடுபட்டதை கண்டு பயணிகளும் சற்று அதிர்ச்சியனர்.மேலும் கீழே இறங்குகள் என்று கூறிய வார்த்தகளை காதில் வாங்கமால் ரகளை செய்து வந்த நிலையில் பேருந்து  அண்ணா சாலை பெரியார் சிலை அருகே  வந்த  போது ரகளையில் ஈட்பட்டவர்களை காவலர்கள் உதவியோடு கிழே இறக்கினார்கள்.மேலும் பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட  2 மாணவர்களையும் பிடித்து சக பயணிகள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மாணவப் பருவம் மிகவும் அருமையானது அதை இழந்தவர்களுக்கே அதன் வலித் தெரியும் இவ்வாறு பயணம் செய்வதால் உயிருக்கு ஆபத்து மட்டுமல்லாமல் வரும் சந்ததினருக்கு தவறான வழிகாட்டுதலாக மாறிவிடக்கூடாது என்பதே பெரும்பாண்மையானவர்களின் ஆதங்கம் கலந்த வருத்தமாக உள்ளது .

author avatar
kavitha