முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்த பும்ரா..!

இந்தியா  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில்

By murugan | Published: Aug 27, 2019 11:22 AM

இந்தியா  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா  8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைபறித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி சார்பில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட் பறித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் நான்காவது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில்  தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc