தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் -நாளை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

நாளை முதல் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.  இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் நாளை முதல் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.