அன்று முதல் இன்று வரை... பட்ஜெட் குறித்த ஓர் அலசல்... பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..

அன்று முதல் இன்று வரை... பட்ஜெட் குறித்த ஓர் அலசல்... பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..

  • இந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு.
  • அன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே.
இந்தியாவில் முதன்முறையாக  பட்ஜெட்  1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது  ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். இது தொடர்பான விரிவான தகவலை விரிவாக காணலாம். Related image சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்: இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முதலாக 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அப்போது நிதியமைச்சராக இருந்த  தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் செட்டி ஆவார். Image result for SHANMUKHAM SHETTY அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்: இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியளில்,  10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொராஜ் தேசாய் முதலிடத்தில் . இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில்  ப.சிதம்பரம் 9 முறையும், மூன்றாவது இடத்தில் பிரனாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ளனர். இதேபோல்,  மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரும் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். தனது பிறந்த நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்தவர்: லீப் வருடத்தில் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்த மொராஜ் தேசாய் 1964 மற்றும் 1968 என இரண்டு முறை தனது பிறந்தநாள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். Image result for morarji desai IN BUDGET பட்ஜெட்டின் நேரத்தை (ம) மாதத்தை மாற்றியவர்கள் : கடந்த  1999-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் சரியாக  மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த பாரம்பரிய முறையை யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு அதிரடியாக  மாற்றினார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் இதேபோல், மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மேலும் 92 வருடங்களாகப் பின்பற்றி வந்த ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட அறிவிப்பை வெளியிடப்பட்டார். Image result for yashwant sinha AND ARUN JAITLEY அல்வா கிண்டும் பழக்கம்: சரியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பத்து  நாட்களுக்கு முன்பு அல்வா கிண்டும் விழா நடைபெறும். அதன் பின்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள்  அச்சிடப்படும். அல்வா கிண்டிய பிறகு ரகசியம் காக்கும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.   Related image பட்ஜெட் அறிக்கையின் அளவு: சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் 39 பத்திகளாக மட்டுமே இருந்த பட்ஜெட் அறிக்கை இருந்தது. பின்னர் அது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கை 253 பத்திகளாக இருந்தது. 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்த வருடம் பட்ஜெட் எப்படி வரப்போகும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!