பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது - தினகரன்

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

By Fahad | Published: Apr 09 2020 01:24 AM

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று  2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தமிழக சட்டசபையில்  துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு  துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் வரைந்த ஓவியமாக  எடப்பாடி பழனிசாமி அரசின் பட்ஜெட் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts