ஓபிஎஸ் 10வது முறையாக பட்ஜெட் தாக்கல்.!

ஓபிஎஸ் 10வது முறையாக பட்ஜெட் தாக்கல்.!

தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சற்று முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசின் இந்த ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் நடைபெற்று வருகிறது. இதை  துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இடம்பெறாதது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அரசின் வருவாயை விட செலவு அதிகம் இருக்கும் என ஏற்கனவே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த முறையின் தமிழக அரசின் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் ஏராளமான புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக பிளவு ஏற்பட்டால் அப்போது நிதித்துறையை கவனித்து வந்த ஜெயக்குமார் 2017-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த வகையில் 2017-ம் ஆண்டை தவிர்த்து 2011 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஓபிஎஸ் தற்போது 10-வது முறையாக துணை முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube