ஏர்செல்லை போல முடங்கும் நிலையில் பிஎஸ்என்எல்!!ரூ.31.287 கோடி நஷ்டம்!!

ஏர்செல்லை போல முடங்கும் நிலையில் பிஎஸ்என்எல்!!ரூ.31.287 கோடி நஷ்டம்!!

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூடு விழாவை நோக்கி செல்கிறது.

ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.

Image result for ஏர்செல்

இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது.

இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர்.

Image result for பிஎஸ்என்எல்

தற்போது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் முடங்கும் நிலையில் உள்ளது.காரணம் ஒவ்வொரு ஆண்டும் பிஎஸ்என்எல்லின்  நஷ்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது.கடந்த 2017-2018  வரை இந்த நிறுவனத்துக்கு ரூ.31.287 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரிய சுமையாக உள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் 4-ஜி சேவை கூட  வழங்க  முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.ஏற்கனவே கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது.தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் மூடு விழாவை நோக்கி செல்கிறது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *