சேவை துறை சேவை துறைதான்... கொவைட்-19 சுய ஊரடங்கு விவகாரம்... வாடிக்கையாளர்களுக்கு எஸ்.என்.எல். 5 ஜிபி இலவசம்...

பி.எஸ்.என்.எல். சேவை நிறுவனம் தற்போது ஒரு  புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

By Fahad | Published: Apr 02 2020 01:57 PM

பி.எஸ்.என்.எல். சேவை நிறுவனம் தற்போது ஒரு  புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்  மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும் என நம்புகிறது. மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும்  வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். ‘[email protected]’ என அழைக்கிறது. இது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்தில் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். வழங்கும் 5 ஜி.பி. டேட்டா முற்றிலும் இலவசம் ஆகும். 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் குறைக்கப்பட்டு நொடிக்கு 1 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
.
 

More News From 5 gb