தமிழகத்தின்  நாளைய தலைவர் மு.க.ஸ்டாலின் -சசிகலா சகோதரர் பேச்சு

அண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்த

By venu | Published: Jan 30, 2020 08:07 PM

அண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்த நிலையில் ,திருமண நிகழ்ச்சி ஒன்றில்  திவாகரன் பேசுகையில் ,தமிழக மக்கள் யார் பின்னர் இருக்கிறார்களோ அவர்கள் பின் நானும் இருப்பேன்.   தமிழகத்தின்  நாளைய தலைவராக மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்று பேசியுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகு வேண்டும் என்ற குரல் வலுத்து வந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை விட்டு விலகினார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.பன்னீர்செல்வம்  எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கினார்கள் .கட்சியையும் ,இரட்டை இலை சின்னத்தையும் பெற்று  ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும்,இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்து வருகின்றனர். எனவே தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு  பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். தினகரனை தொடர்ந்து அண்ணா திராவிடர் கழகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்தார்.இதற்கு திவாகரன் பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில்தி.மு.க எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் கவனக்குறைவாக இருந்ததால் சில இடங்களில் வெற்றி பறிபோயுள்ளது.தமிழக மக்கள் யார் பின்னர் இருக்கிறார்களோ அவர்கள் பின் நானும் இருப்பேன்.தமிழகத்தின் நாளைய  தலைவராக  மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்று பேசியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc