தமிழ் பெண்ணின் கஷ்டத்தை பார்த்து பிரித்தானியா பல்கலைக்கழக மாணவன் உருவாக்கிய இயந்திரம்!

பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு பிரித்தானியாவை சேர்ந்த மாணவன் சலவை

By sulai | Published: Dec 24, 2019 08:01 AM

  • பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு பிரித்தானியாவை சேர்ந்த மாணவன் சலவை இயந்திரத்தை பரிசளித்துள்ளார்.
  • மேலும் அவர் உருவாக்கிய சலவை இயந்திரம் ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் நிறுவப்பட உள்ளது. 
பிரித்தானியாவை சேர்ந்த நாவ் சாவ்னி என்ற மாணவர் பாத் பல்கலை கழகத்தில் மனிதாபிமானம் என்ற பிரிவில் பி.எஸ்.சி பயின்று வருகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திவ்யா என்ற பெண் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால் அவரிடம் பேசி வந்துள்ளார்.பின்னர் ஒரு நாள் திவ்யா நீண்ட நேரம் துணிதுவைப்பதை பார்த்த அவர் அதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்து கேட்டுள்ளார். அதற்கு திவ்யா முதுகு வலியும் மூட்டுவலியும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.இதன் காரணமாக அவர்களுக்கு உதவ முடிவெடுத்த நாவ் சாவ்னி,பிரித்தானியா வந்தவுடன் ஒரு நிமிடத்திற்கு 10 கிலோ துணி துவைக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அவர் உருவாக்கிய விலை குறைவான 50 சலவை இயந்திரம் ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் நிறுவப்பட உள்ளது.இதன் காரணமாக தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc