ஆபாச படங்கள் வைத்திருந்த புகார் எதிரொலி! இங்கிலாந்து மூத்த அமைச்சர் டேமியன் கிரீன் ராஜினாமா….

ஆபாச படங்கள் வைத்திருந்த புகார் எதிரொலி! இங்கிலாந்து மூத்த அமைச்சர் டேமியன் கிரீன் ராஜினாமா….

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-யின் நண்பரும், மூத்த அமைச்சருமான டேமியன் கிரீன் ((Damian Green)) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற அலுவலகத்தில் பெண் ஊழியர்களிடம் எம்.பி.க்கள் பாலியல்ரீதியாக அத்துமீறுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில், நாடாளுமன்ற அலுவலக அறைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, டேமியன் கிரீனின் அலுவலக பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டரில், ஆபாச படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டன. இவற்றை அவர் மறுத்தபோதும், எதிர்ப்புகள் வலுத்தன.

இதையடுத்து, டேமியன் கிரீனை பதவி விலகுமாறு பிரதமர் தெரசா மே வலியுறுத்தியிருந்தார். அதன்பேரில், டேமியன் கிரீன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

source: dinasuvadu.com

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *