#BREAKING:பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி.!

பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பதவி நீக்கினார். இதனால்,  துணைப் பொதுச்செயலாளராக  அந்நியூர் செல்வராஜை மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி வந்து, பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் . திமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட விபி துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார் உடன் இல.கணேசன் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

author avatar
Dinasuvadu desk