#BREAKING : எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் -முதலமைச்சர் அறிவிப்பு

#BREAKING : எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் -முதலமைச்சர் அறிவிப்பு

  • சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். 
  • வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர். இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இதையெடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார்.அப்பொழுது சோதனை சாவடி அருகில் ஒரு  கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி  நிவாரண நிதி வழங்கப்படும்  என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!
#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.!
அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.!
ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி.!
பந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்!
ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!
9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!