#BREAKING: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு -தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

#BREAKING: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு -தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

  • இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. 

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது.பின்னர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி வருகின்ற 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சில மாணவர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றது. மேலும்  நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்திய மருத்துவ கவுன்சில்  பல் மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Join our channel google news Youtube