BREAKING NEWS:கர்நாடக தேர்தல் முன்னணி நிலவரம்!மைசூரு பகுதியிலுள்ள தொகுதிகளில் மாஜக- காங்கிரஸ் இடையே கடும் இழுபறி!

மைசூரு பகுதியிலுள்ள தொகுதிகளில் மாஜக- காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கிறது.

கர்நாடக தேர்தல் முன்னிலை நிலவரம்:

பாஜக – 75

காங்கிரஸ் – 67

ம.ஜ.தளம் – 24

மற்றவை – 0

மொத்தம் – 166/222

பலத்த பாதுகாப்பு:

முதல்வர் சித்தராமையா போட்டியிடும் சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய தொகுதிகளில் முறையே மஜத வேட்பாளர் ஜி.டி.தேவகவுடா, பாஜக வேட்பாளர் ஸ்ரீராமலு அவருக்கு கடும் போட்டியை கொடுத்தனர். இதே போல சிவாஜிநகர் தொகுதியில் தற்போதைய அமைச்சர் ரோஷன் பெய்கிற்கும் (காங்கிரஸ்), முன்னாள் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவுக்கும் (பாஜக) பலத்த போட்டி நிலவுகிறது.

கடந்த 12-ம் தேதி 222 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. கர்நாடகா முழுவதும் 58, 302 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல்வைக்கப்பட்டு, மாநிலத்தின் 38 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில் நண்பகல் 12மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment