BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்பு!

தற்போது கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளர்.

இதேபோல் மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறுகையில்,காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் .சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது, பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்றும்  குமாரசாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது எங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல் எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டுள்ளனர்.

எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில்  சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது  காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment