BREAKING NEWS:கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு!

கர்நாடகாவில் காலா  ” படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .  தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.

கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கருத்து:

இதேபோல் முன்னதாக  கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கருத்து கூறியுள்ளார். மன்னிப்பே கேட்டாலும் காலா படத்தை வெளியிட மாட்டோம் என்று கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி தெரிவித்துள்ளார். படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் இனி வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரகபஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதமைச்சர் குமாரசாமி கருத்து:

இதுக்குறித்து கர்நாடகா முதமைச்சர் குமாரசாமி ‘மக்கள் இந்த படத்தை பார்க்க விரும்பவில்லை என்று தான் பிலிம் சேம்பர் மனு கொடுத்துள்ளது.

இதைப்பற்றி விசாரித்து அப்படி அவர்கள் சொல்வது உண்மையென்றால் காலா இங்கு ரிலிஸ் ஆகாது’ என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால்:

இந்த பிரச்னையை பற்றி கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் “ரஜினிக்கும் காவிரி பற்றி பேச உரிமை உள்ளது. இந்த பிரச்சனை பற்றி பேசி முடிவெடுக்கப்படும். காலா பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடமும் பேச தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கூறிய கருத்து:

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை திரையிட கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் மறுத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், காலா திரைப்படம் ரஜினியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றும், அதில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment