மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா

மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா

ஐபிஎல்2020  போட்டிகள் கோலகலமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கு கொண்ட அணிகள் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தினை அரங்கேற்றி வருகின்றனர்.ஆனால் நடப்பு ஐபிஎல் போட்டியில் ஜொலிக்க சென்னை மட்டும் தவறியது.

சென்னை ஆடிய அனைத்து போட்டிகளிலும் தனது முழு பலத்தைக் காண்பித்து விளையாடவில்லை.

கேப்டன் தோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி இவ்வாண்டு கடும் விமர்சனங்களை சந்தித்தது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றையும் இழந்து முதல் அணியாக போட்டியில் இருந்து வெளியேறுகிறது.

இந்நிலையில்  பிளே ஆப் சுற்று பறிபோன நிலையில் நேற்று ஆறுதல் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது குறித்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறுகையில் :

 சிஎஸ்கே அணி  இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இளம் வீரர்களைச் சேர்க்காமல் அனுபவம் என்ற ஒன்றின் பக்கமே  தொடந்து நின்றது.

மேலும் சென்னை தொடர்ந்து அனுபவம்  மற்றும் வயதான வீரர்கள் பக்கமே நின்றதுதான் இம்முறை மோசமான தோல்விக்கு காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube