#Breaking : மறைமுகத் தேர்தல் - வீடியோ பதிவிற்கு தடை

#Breaking : மறைமுகத் தேர்தல் - வீடியோ பதிவிற்கு தடை

  • video |
  • Edited by venu |
  • 2020-01-10 12:37:38
  • மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது. இதனையடுத்து நாளை மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த  லலிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டது .அந்த விளக்கத்தில் ,குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் அனைத்து இடங்களிலும் ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று  கேள்வி எழுப்பியது. மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி  அளிக்கப்பட்டது.மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வீடியோ பதிவு தொடர்பாக ஜனவரி 21- ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இதற்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதை விசாரித்த நீதிமன்றம் , உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.மேலும்  உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது.  

Latest Posts

மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!