இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை! – ராமதாஸ்

இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை! – ராமதாஸ்

கொரோனா குறித்து இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை என்று ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 5.73 லட்சம் பேர் பாதிப்பு. அமெரிக்காவில் தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து, 1.01 லட்சமாக உயர்வு. பல நாடுகளில் இரண்டாவது அலை தீவிரமாக வீசுகிறது.

அலட்சியம் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். எனவே, வெளியில் செல்லும் போது முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி மிகவும் அவசியம். வீடு திரும்பியதும் கை கழுவுதல் கட்டாயம். பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கொரோனா தொற்று குறித்து, தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். எனது எச்சரிக்கைகளை பலர் செவி மடுத்தனர். சிலர் உதாசீனப்படுத்தினர். பண்டிகை மற்றும் பருவநிலையால் நிலைமை மோசமாகி வருகிறது. இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல. எச்சரிக்கை, கவனம் தேவை!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube