#Breaking: தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்.!

#Breaking: தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்.!

  • தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
  • இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் நடத்த உத்தரவுட்டுள்ளது. மேலும் தமிழில் நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

தஞ்சை பெரிய கோயிலில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கு நிகழ்வை ஆகம விதிப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில்,மனுதாரர்கள் தரப்பில், ஆகமம் என்பது தமிழ் மொழிக்கானது என்றும், சமஸ்கிருதத்தில் அதற்கான பொருள் இல்லை என்றும் வாதிடப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோயிலில் கருவறை உள்ளிட்ட எல்லா பகுதியிலும் சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று இந்து அறநிலைத்துறை தெரிவித்தது.

இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில் , உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று காலை தீர்ப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் வருகின்ற 5-ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கை தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் நடத்த உத்தரவிட்டனர். மேலும், தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம் மதுரை கிளை.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube