#BREAKING: குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது ..!

  • தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு , மற்றும் குரூப் -4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்தது விசாரணையில் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதக் கூடியவர்கள் முதல் 20 கேள்விகளுக்கான விடையை மட்டுமே அவர்கள் பதிவு உள்ளனர். 

தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு , மற்றும் குரூப் -4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  ராமேஸ்வரம் மையத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள்கள் வந்த போது மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 42 பேர் மீது தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  அந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 20 கேள்விகளுக்கான விடையை மட்டுமே அவர்கள் பதிவு உள்ளனர். அதன்பிறகு வேறு எந்த கேள்விக்கும் அவர்கள் விடை அளிக்கவில்லை.

இதையெடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து அந்த விடைத்தாள் கொண்டு செல்லும் போது  ஜெயக்குமார் தலைமையிலான ஒரு மோசடி கும்பல் அந்த விடைத்தாள்களை எடுத்து மற்ற கேள்விகளுக்கான பதிலளித்தது விசாரணையில் தெரிய வந்தது.இந்த முதல் 20 கேள்விகளுக்கு விடைகளைத் அளித்து இருக்க கூடியவர்கள் தான் தனக்கு பணம் கொடுத்தவர்கள் என்பதை அடையாளம் கட்டுவதற்காக இதை ஒரு குறியீடாக ஜெயக்குமார் வைத்திருக்கிறார்.

எனவே அந்த குறியீட்டு வைத்துதான் ஜெயக்குமார் தலைமையிலான அந்த மோசடி கும்பல்  பிற கேள்விகளுக்கு பதில் எழுதி இருக்கிறார்கள். இதன் மூலமாக 42 பேருக்கு மதிப்பெண் கிடைத்தது மட்டுமல்லாமல் அரசு பணியும் கிடைத்தது.இதனை மையமாக வைத்துதான் அவர்கள் குரூப்-4 தேர்வுக்கான முறைகேட்டை செய்து இருந்தது விசாரணையில் தெரிய வந்தது .

குரூப் 2ஏ தேர்வுக்கு பிறகு விடைத்தாள்களில் பல்வேறு  சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதன் பிறகு 2018-ம் ஆண்டுக்குப் பிறகு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்கள் எத்தனை கேள்விகளுக்கு அவர்கள் பதில் எழுதி உள்ளார்கள் , எத்தனை கேள்விகளுக்கு அவர்கள் பதில் எழுதவில்லை என்பதை அந்த தேர்வு மையத்தில் இருக்கும் அதிகாரிகள் தனியாக ஒரு பதிவு செய்ய வேண்டும் கூறியது.

இந்த  நடைமுறை வந்த பிறகு நாம் மீண்டும் மாற்றி விடுவோம் என பயந்து தான் ஜெயக்குமார் மறையக்கூடிய பேனாவை வைத்து குரூப் -4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார்.தேர்வு முறைகேடு செய்த ஜெயக்குமாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.மேலும் அவரை தேடக்கூடிய பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

குரூப் -4 தேர்வு முறைகேடு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய விசாரணையில் , 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk