#BREAKING: எல்லையில் சீனப் படை – பிரதமர் அவசர ஆலோசனை..!

லடாக் எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனை.

கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், இந்திய கட்டுப்பாட்டுக்குள்ள 4 கிலோ மீட்டர் வரை உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்காலிக கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கும் குழிகள் போன்றவை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை சீன ராணுவம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்தியா சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையான வீரர்களை குவித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை.  எல்லையில் சீனா வீரர்களைக் குவித்து வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா படைகள் குவிக்கப்பட்டதால் 73 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk