உத்தரபிரதேசத்தில் “கோவாக்சின்” தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!

உத்தரபிரதேசத்தில் பாரத பயோடெக்கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனை தொடங்கபடவுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் பரிசோதிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் கோரக்பூரில் அதன் 3வது கட்ட சோதனையை தொடங்கவுள்ளது .

இது குறித்து சுகாதாரதுறை தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இயக்குநர் வி.கிருஷ்ணா மோகனுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இரு நகரங்களிலும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பரிசோதிக்க உத்தரபிரதேச அரசின் அனுமதியை தெரிவித்தார்.

மேலும், உத்தரபிரதேசத்தில் கோவாக்சின் தடுப்பூசியின் 3 வது கட்ட பரிசோதனைகளைத் தொடங்க அனுமதி கடந்த செப்டம்பர் 19 தேதியிட்ட உங்கள் கடிதத்தை தயவுசெய்து பார்க்கவும். அதில், லக்னோ மற்றும் கோரக்பூரில் “கோவாக்சின்” தடுப்பூசியின் 3 கட்ட சோதனை நடத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரசாத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.