#Breaking : 20 ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21

By Fahad | Published: Apr 07 2020 02:12 PM

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.எனவே சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.