#BREAKING : 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து-பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு

#BREAKING : 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து-பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.Image

இந்நிலையில்  5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5, 8ஆம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து,இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.எனவே ,ஏற்கனவே  உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

Join our channel google news Youtube