BREAKING:ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

BREAKING:ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

கடந்த ஆகஸ்ட் மாதம்  21-ம் தேதி  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்   ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறையும்  கைது செய்தது.இதனால் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதை தொடந்து  ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இரண்டு நாள்கள் முன் உச்சநீதிமன்றத்தில் வந்தது.அப்போது சிதம்பரம் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வழக்கின் விசாரணை வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.இந்நிலையில்  அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரி இருந்தது.
இதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுத்து உள்ளது.அதன் படி நாளையும் ,நாளை மறுநாளும் விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube