#BREAKING:அலிகார் பல்கலைக்கழக10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு.!

#BREAKING:அலிகார் பல்கலைக்கழக10,000 மாணவர்கள் மீது வழக்கு பதிவு.!

  • குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.
  • கடந்த 15 -ம் தேதி போராடட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் 10,000 அலிகார் மாணவர்கள் மீது  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது.

இதை தொடர்ந்து மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து  நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. அதிலும் உத்திரபிரதேசம் ,டெல்லி உள்ளிட்ட  மாநிலங்களில் போராட்டம்  தீவிரம் அடைந்து உள்ளது.

அதிலும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜாமியா கல்லூரி மாணவர்கள் மாற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்லூரி மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி காரணமாக இந்த குடியுரிமை திருத்த மசோதாவை போராட்டம் இந்தியா  முழுவதும் தீவிரம் அடைந்து உள்ளது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 15 -ம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட  போராடட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் 10,000 அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube