#BREAKING :மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு 30% மானியம் -முதலமைச்சர் அறிவிப்பு .!

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூல தனத்தில் 30% மானியம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.மேலும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100 % முத்திரைத் தாள் கட்டணம் விலக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வெண்டிலெட்டோர் , N 95 மாஸ்க் , கொரோனா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் தேவையான தனி நபர் பாதுகாப்பு பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ உபகரணங்கள் மட்டும் மருந்து பொருள்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்கினால் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் கூறினார்.

இதையெடுத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மூலகடனிற்கான வட்டியில் 6%மானியமாக வழங்கப்படும் என கூறினார்.

author avatar
murugan