காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.!

புதுக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன்

By balakaliyamoorthy | Published: Feb 16, 2020 05:04 PM

  • புதுக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10, 11,12-ம் வகுப்புகளில் சுமார் 120  மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னாள் மாணவர்கள் அவர்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் அரசு மேல்நிலை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்  கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மேம்பட பள்ளியில் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் மற்றும் பிஸ்கெட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.! இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் கூறுகையில், 10, 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் காலையில் பள்ளிக்கு வரும் போது சிலர் சாப்பிடாமலேயே வருவதால் சோர்வடைந்து விடுகிறார்கள். இதை காரணமாக கொண்டு அவர்கள் சோர்வடையாமல் இருக்க தினமும் இட்லி, பூரி மற்றும் பொங்கல் என காலை உணவுகளை வழங்கி வருகிறோம். மேலும் மாலை 6 மணி வரை மாணவர்கள் பள்ளியில் படிப்பதால்  அவர்கள் களைப்படையாமல் இருக்க ஒவ்வொரு நாளும் தானியங்கள் அதனுடன் சேர்த்து பிஸ்கெட் கொடுத்து வருகிறோம். காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.! இந்த திட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியோடு வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ.2300 வரை செலவாகிறது. இதற்காக கிராம மக்களும் தங்களது பங்களிப்பை போட்டிபோட்டு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று கிராம மக்கள் பங்களிப்பை செய்தால் நிச்சியமாக படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் மற்றும் மதிப்பெண் உயரும் என தெரிவித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc