கொரோனா வைரஸால் மூலையில் பாதிப்பு? ஆய்வுகளின் முடிவுகளில் கண்டுபிடிப்பு!

கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த நோய் மூலையில் பாதிப்பை ஏற்படுவதாக கண்டறிந்தனர். மேலும், கொரோனா தீவிரமடைந்தால், பக்கவாதம், மூலையில் வீக்கம், போன்ற அறிகுறிகள் தென்படும் என நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நரம்பியல் சிக்கல்கள் குறித்தும், அவற்றின் பின்னால் உள்ள வழிமுறைகளைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வுகள் தேவை என தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸை முழுமையாகப் புரிந்துகொள்ள, இந்த தகவலை தொடர்ந்து சேகரிப்பது மிகவும் முக்கியமானது என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் சாரா பெட் கூறினார்.

இங்கிலாந்தில் கொரோனா அதிகம் பரவதொடங்கிய நேரம் அதாவது, ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கொரோனா உறுதியான நோயாளிகள் சிலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது 125 நோயாளிகளில், 77 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவற்றுள் பெரும்பாலானவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளே ஆவார்கள்.

அதில் பெரும்பாலானவை, மூளையில் இரத்த உறைவு காரணமாக ஏற்பட்டவையே ஆகும். இது இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக, 39 நோயாளிகளுக்கு கொரோனா, மூலையில் பாதிப்பை ஏற்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு என்செபலோபதி எனப்படும் குறிப்பிடப்படாத மூளை செயலிழப்பு இருந்தது. மேலும் ஏழு பேருக்கு மூளையின் வீக்கம் அல்லது என்செபாலிடிஸ் இருந்தது.

இதன் காரணமாகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பலருக்கு மூளை நோய் ஏற்படுவதை கண்டுபிடித்தனர்.