நடிகராக ‘முதல் ஆஸ்கர்’ விருது வென்ற பிராட் பிட்.!

  • 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது.

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கான உயரிய கவுரமாக கருதப்படுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சினிமா பிரபலங்கள் விதவிதமான உடையணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இந்த விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இதனிடையே சிறந்த துணை நடிகர் விருதுக்காக ஆல்பசினோ, ஜோ பெஸ்கி, டாம் ஹாங்க், பிராட் பிட் என முன்னணி நடிகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக நடிகர் பிராட் பிட்டுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது பிராட் பிட்டுக்கு நடிகராக வென்றுள்ள முதல் ஆஸ்கர் விருது என கருதப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்